fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 6) அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிளஸ்-1 பொதுத்தேர்வானது இன்று மார்ச்-6ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7,278 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுத்துவதாகவும், மொத்தம் 8 லட்சத்தி 16 ஆயிரத்தி 618 மாணவ -மாணவிகளும், தனித்தேர்வர்கள் என 5,032 மாணவர்களும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுதுகின்றனர்.

மேலும் 2,914 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு இந்த தேர்வு எழுதப்படவுள்ளது.சென்னை நகரில் மட்டும் 410 பள்ளிகளில் இருந்து 156 மையங்களில் 47,305 மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். அதேபோல் புதுசேரியிலும் 40 தேர்வுமையங்களில் 14,985 மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளை கண்காணிக்க 45 ஆயிரத்தி 300 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிட 4 ஆயிரம் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தேர்வு எழுதவரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் துண்டுத்தாள் வைத்திருத்தல், பார்த்து எழுத முயற்சி செய்தல் , காப்பி அடித்தல் , ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுமைய வளாகத்தில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close