காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த வாகனத்தை கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.

முதல் கட்ட தகவலில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பல வீரர்கள் பலத்த காயங்களுடன் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். எனினும் சிகிட்ச்சை பலனின்றி பலவீரர்கள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது.
தற்போது கிடைத்துள்ள தகவலின் பேரில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.இந்த சம்பவத்திற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்மந்திரிகளான உமர் அப்த்துல்லா மற்றும் மெஹபூபா முக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.















