fbpx
GeneralRETamil News

மகாராஷ்ட்ராவில் தவிக்கும் தமிழர்கள். எங்க நிலைமை ரொம்ப மோசம்!

தமிழகத்திலிருந்து ஜவுளி ஏற்றி சென்ற லாரி டிரைவர்கள் 48 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறார்கள் அவர்களுக்கு அங்கு தண்ணீர் , உணவு மற்றும் உடைகள் இல்லாமல் தவிக்கிறார்கள்.
கடந்த மாதம் தமிழ்நாட்டை விட்டு லோடு ஏற்றிக்கொண்டு குஜராத்திற்கு வந்தவர்கள் இந்த லாரி டிரைவர்கள்.

இங்கு உள்ள உள்ள டிரைவர்கள் அனைவரும் வேறுவேறு கம்பெனியில் இருந்து லோடு ஏற்றி வந்தவர்கள்.

கொரோனா தொற்று காரணமாக லோடு இறக்கிவிட்டு மீண்டும் தமிழகத்திற்கு திரும்பி விடுவார்   என்று தன் சொந்த செலவில்  செல்ல முடிவு செய்து 48 டிரைவர்களும் குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வழியிலான மகாராஷ்டிரா பூனே அடுத்து சிவபுராணம் சத்தாபுரம் மாவட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும் அங்கு ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்துள்ளனர் எங்கள் அனைவரையும்.

நோய் தொற்று அதிகமாக உள்ளதால் தங்களை அனுப்ப முடியாது என்றும் 14 நாட்கள் கழித்து நோய்த்தொற்று இல்லை என்று உறுதியான பின் அனுப்புவதாகவும் அவர் கூறியிருந்த நிலையில் இன்று வரை காத்திருந்து 17 நாட்கள் ஆகிவிட்டது.

அவர்கள் திரும்ப அனுப்புவதாக சொல்லியது 15 நாட்களில் ஆனால் இன்று 17 நாட்கள் ஆகியும் அனுப்ப மறுக்கிறார்கள்.

கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் எங்களை அனுப்பி மறுக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு  எதாவது தகவல் அனுப்பினால் மட்டுமே அனுப்புவோம் என்று கூறுகிறது மகாராஷ்டிரா அரசு.

இங்கே இருக்கும் உணவு உண்பதால் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் சிலர் இருக்கிறார்கள்.

உண்ண உணவு சரியில்லை உடுத்த உடை மாற்ற வேறு உடை இல்லை மிகவும் கவலைக்கிடமாக உள்ளோம்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை ஆனால் நாங்கள் இங்கு இருக்கும் நிலையால் தான் இழந்துவிடும் என்று தோனுது கிறது என கூறுகின்றன.

தினமும் இந்த மகாராஷ்டிர அரசு எங்களை பரிசோதித்து தான் வருகிறது யாருக்கும் இந்த கொரோனா தொற்று இல்லை.

தமிழகத்திற்கு தயவு செய்து அனுப்பி விடுங்கள் எங்கள் குடும்பம், குழந்தை, மனைவியை விட்டு பிரிந்து இங்கு மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

தமிழக அரசு எங்களை முழுவதுமாக பரிசோதனை செய்த பின்பு எங்கள் குடும்பத்திற்கு  அனுப்பலாம் அதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

தயவு செய்து எங்களை எங்கள் மாநிலத்திற்கு அனுப்புமாறு அங்குள்ள டிரைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close