fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

பஞ்சாப் இரயில் விபத்து 2-வது நாளாக போராட்டம் ; தசரா விழா ஏற்பாட்டாளர்களின் வீடுகள் மீது தாக்குதல்.

பஞ்சாப் மாநிலத்தில் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவின் கடைசியாக இராவணனின் உருவ சிலைக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். அவ்வாறே அப்போதும் அந்த இராவணனின் உருவ சிலைக்கு தீ வைத்து எரித்த போது அதன் உஷ்ணத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தின் அருகில் சென்றனர். அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த அதிவேக ரயில் அங்கு நின்று கொண்டிருந்த மக்களின் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதி கொன்று சென்றது. அதனால் இந்த விபத்தால் 50-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாள பகுதி அனுமதிக்கப்படாத பகுதியாகும்.அப்படியிருக்கும் போது ரயில் நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் கேட்கப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அப்பகுதிமக்கள் இச்சம்பவத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து நடைபெற்ற பகுதியில் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர் ,மேலும் இந்த விழாவின் ஏற்பாட்டாளர்களின் வீடுகள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் செய்து வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றமாக உள்ளது.

அதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு , ரெயில் சேவைகள் மாற்றப்பட்டும் உள்ளது. மேலும் இந்த விபத்தால் உத்திரபிரதேச மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளிகள் அதிக அளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close