fbpx
RETamil Newsஇந்தியாஉலகம்

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி!

Modi thanks Canadian PM!

 

COVID-19 தொற்றுநோயை எதிர்த்து உலக நாடுகள் போராடி வரும் நிலையில், உலக மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவத் துறையில் இந்தியாவின் பங்கு தொடர்ந்து இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் விவாதித்துள்ளார்.

COVID-19 தொடர்பாக நிலவும் உலகளாவிய நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவும், கனடாவும் சேர்ந்து செயல்படுவது மிக முக்கியம் என்றும், இந்த கடினமான காலங்களில் கனடாவில் உள்ள இந்திய குடிமக்களை நன்கு கவனித்தமைக்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு “நன்றி ” தெரிவித்தார். இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு “மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பானது “மிகவும் அவசியம்” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவும், கனடாவும் கூட்டாக இந்த தொற்றுநோயை எதிர்த்து எடுக்கும் முயற்சிக்கு தங்களது பங்களிப்பை அளிப்போம் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும் இந்த சமயத்தில் கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி மற்றும் ஆதரவுக்கு கனடா பிரதமருக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close