ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா? கவுன்டர்கள் ஓபன்!
In Chennai, train reservation counters opened

சென்னை:
ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரையிலான பயணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. அந்த டிக்கெட்களுக்கான கட்டணம் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், கவுன்ட்டர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய ஏதுவாக, சென்னை கோட்டத்தில் உள்ள 19 முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மார்ச் 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்று முதல் பணம் வழங்கப்படும்.
ஏப்ரல் 1 முதல் 14ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூன் 12ம் தேதி முதல் பணம் வழங்கப்படும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை 19 முன்பதிவு மையங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.















