fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பயங்கரவாதிகளை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் – மக்கள் கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த வாகனத்தை கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.

இவ்வாறு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடூர செயலுக்கு நாடெங்கும் மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் கொடியையும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மசூர் அசார் என்ற கொடுரப்பாவியையும் எதிர்த்து மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வீரமரணமடைந்த அணைத்து வீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு நடத்தப்படும் மக்கள் போராட்டங்களின் புகைப்பட தொகுப்புகள்;

Related Articles

Back to top button
Close
Close