fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி ரயில், பயண கட்டணம்…! தமிழக அரசு அசத்தல்

Special Train for migrant workers

சென்னை: அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தால் தனி ரயில் விடப்படும், கட்டணத்தை தொழிலாளர்களின் சொந்த மாநிலமோ, தனி நபரோ செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பல இடங்களில் வருமானம் இன்றியும், உணவு இன்றியும் அவதிப்படுகின்றனர். எப்போது ஊர் திரும்புவது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந் நிலையில், தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புதல் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போக்குவரத்து கட்டணத்தை தொழிலாளர்களின் சொந்த மாநிலமோ, தனிநபரோ செலுத்தலாம். ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடு விளக்கங்களை தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டும். வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வருவோர் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். சோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்றாலும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பின் அவர்களுக்கு தனி ரயில் இயக்கப்படும். தொழிலாளர்களின் பயணத்தை ஒருங்கிணைக்க மாநில வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியாக பேரிடர் மேலாண்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுல்யமிஸ்ராவுக்கு உதவுவதற்காக மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close