fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்புகள் ரத்தாகிறதா…?

Shift method may cancel in Colleges

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே 17ம் தேதியுடன் முடிய உள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த முடிவை அந்தந்த மாநிலங்கள் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் கல்லூரி கல்வி இயக்ககம் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கல்லூரி மேம்பாட்டு பணிகளுக்கான நிதி கோரி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 தடவை சுழற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. அதாவது காலை வேளையில் ஒரு பிரிவினருக்கும், மதிய வேளையில் ஒரு பிரிவினருக்கும் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு 2 முறை சுழற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டிட வசதிகள் குறைவே அதற்கு காரணம் ஆகும்.  இந்நிலையில் இந்த சுழற்சி வகுப்புகளை ரத்து செய்து விட்டு காலை முதல் மதியம் வரை ஒரே கட்டமாக கல்லூரிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close