fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்ட பல ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது !!

9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த போராட்டத்தால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டதால் , இதில் ஈடுபட்ட பல்வேறு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டதையே கடைபிடிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முயன்றனர். ஆனால் அதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிபதிகள் கேட்டுக்கொண்டதால் அடிப்படையில் அந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த பிரச்சனைக்கு அரசு எந்த வித பதிலும் அளிக்காததால், கைவிடப்பட்ட போராட்டத்தை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்துவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடங்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து இன்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, கடலூர், திருப்பூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close