fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

குஜராத்தில் மட்டும் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி டெபாசிட்!!

காந்திநகர்:

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் குஜராத்தில் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ. 3,118.51 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவருக்கு நபார்டு தலைமை பொது மேலாளர் அளித்த தகவலின் படி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குனராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ.745,59 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல் குஜராத் பாஜக அமைச்சர் ஜெயஷ்பால் விட்டல்பாய் தலைவராக உள்ள ராஜ்காட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.693.19 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில்,” பணமதிப்பிழப்பு அறிவிப்பு என்பது மிகப் பெரிய ஊழல் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் கறுப்பு பணம் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. சூரத் மாவட்ட கூட்டுறவு வங்கி, சபர்கந்தா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை உள்பட மொத்தம் 11 வங்கிகளில் ரூ.3,118.51 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் ரூ.22,270 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக ஆளும் மாநில கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.14,293 கோடி அதாவது 64.18 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

Related Articles

Back to top button
Close
Close