fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

3 ஆயிரத்தை நோக்கி ராயபுரம்…! தலை சுற்ற வைக்கும் கொரோனா…!

Royapuram reaches 2446 corona cases

சென்னை:

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

நேற்று இரவு 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 154 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,446 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,678, திரு.வி.க.நகர்  1,437, திருவொற்றியூர் 414, மாதவரம் 298, தண்டையார்பேட்டை 1,425 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அம்பத்தூர் 539, தேனாம்பேட்டை 1,500, வளசரவாக்கம் 816, அண்ணாநகர் 1,143, அடையாறு 745, பெருங்குடி 226, சோழிங்கநல்லூரில் 233, ஆலந்தூர் 188, மணலி 190, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 84 பேர் என மொத்தம் 13,362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close