fbpx
RETamil Newsதமிழ்நாடு

ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

ஏப்ரல் 30-ஆம் தேதி வடதமிழகம் அருகே புயல் வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ; தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையானது , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்து வரும் 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக மாறி புயலாக உருவாகும்.எனவே ஏப்ரல் 30-ம் தேதி வட தமிழகம் அருகே புயல் உருவாகும். மேலும் புயலின் நகர்வை பொறுத்தே மழையோ அல்லது காற்றோ இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close