fbpx
GeneralRETamil Newsஅரசியல்இந்தியா

இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும்…! ராகுல் காந்தி!

Rahul Gandhi tweet about nature

டெல்லி:

இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டு உள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்.

சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020- ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close