fbpx
Others

ரஷியா–இந்தியஉள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுறது…

அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மதசுதந்திரத்தின் நிலையைகண்காணிக்கவேண்டும்எனக்கூறியிருந்தது.இந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்தது. இதனை நிராகரித்த மத்திய அரசு, இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் யுஎஸ்சிஐஆர்எப் அமைப்பு தலையிட முயற்சிசெய்வதாக பதில் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்திரமற்ற இந்தியாவை உருவாக்க அமெரிக்கா முயற்சிசெய்கிறது என ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியிருப்பதாவது:-இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்றகுற்றச்சாட்டுகளை அமெரிக்காகூறிவருகிறது.இந்தியாவில்உள்நாட்டுஅரசியல்சூழ்நிலையைசமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதேஅமெரிக்காவின்நோக்கமாகஉள்ளது.இந்தியஉள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close