fbpx
REதமிழ்நாடு

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு…! கைதாகிறாரா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Police department case filed against premalatha vijaykant

சென்னை:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் ஜெயஸ்ரீ விவகாரம் தமிழகத்தையே அதிர வைத்தது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். இந்த சம்பவத்தை  சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.

ஜெயஸ்ரீயை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜெயஸ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, 1 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார்.

இந் நிலையில் 144 தடை உத்தரவை மீறி பிரேமலதா விஜயகாந்த் ஜெயஸ்ரீ வீட்டிற்கு சென்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த செய்தி அறிந்த அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close