fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

திருப்பூரில் பிரதமர் மோடி உரை!

திருப்பூரில் பிரதமர் மோடி உரை வருமாறு:

ஏற்கனவே செயல்பாட்டில்  உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப் பிரிவு ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

சமூக நீதி என்பது கணக்கியல் அல்ல. இது நம் நம்பிக்கையில் எடுத்துக்காட்டு. வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் சில எதிர்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.

காங்., – தி.மு.க., ஆட்சி காலத்தில், பதவி உயர்வில், எஸ்.சி., – எஸ்.டி.,யினருக்கான இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால், அந்த சமூகத்தின்  நலன் கருதி, வாஜ்பாய் காலத்தில் அந்த முறை மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும்  கிடைக்க வேண்டும். காமராஜர் விரும்பிய ஊழலற்றை அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது.

அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் குறிக்கோள். இது தான் பா.ஜ., அரசின் எதிர்கால திட்டமும் கூட.

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தினருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வளமான பாரதம் உருவாக உறுதி எடுப்போம். பாரத் மாதா கீ ஜெய்

இவ்வாறு மோடி தன் உரையில் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close