fbpx
RETamil News

கோவையில் பயிர்களை நாசம் செய்து 4 பேரை கொன்ற யானை பிடிபட்டது.

கோவையில் ஏராளமான பயிர்களை நாசம்செய்து மேலும் 4 பேரை கொன்ற விநாயகன் என்ற யானை வனத்துறையுனரால் பிடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஊர்களில் கட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாகவே உள்ளது.இந்நிலையில் 2 யானைகள் அந்த பகுதியில் சுற்றிவருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், அப்பகுதி வனத்துறையும் யானைகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கும்கி யானைகளை கொண்டு அந்த யானைகளை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ( செவ்வாய் கிழமை அன்று விநாயகன் என்ற யானை மயக்க ஊசி போடப்பபட்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மண்டலா வனப்பாதுகாப்பு காவலர் தீபக் ஸ்ரீனிவாசன் கூறுகையில் ;

விநாயகன் என்ற கட்டு யானை பொது மக்கள் 4 பேரை கொன்றதுடன் ஏராளமான பயிர்களை நாசமும் செய்துள்ளது.இந்த யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வயநாடு வன பகுதியில் விடப்படும். இந்த யானை நான்கரை டன் உடையதாகவும், அதன் வயது 30 வயத்திற்குள்ளும் இருக்கும் என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close