டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது .
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.
முதல் சீசனில் தூத்துக்குடி அணியும், இரண்டாம் சீசனில் சேப்பாக்கம் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் மூன்றாவது சீசன் இன்று நெல்லையில் நடைபெறுகிறது.
உள்ளூர் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிப்பதற்காக நடத்தப்படும் இந்த போட்டியில்,
ஒவ்வொரு அணியும் இரண்டு வெளிமாநில வீரர்களை நியமித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.