fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு..! உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்!

OBC Reservation, dmk file caveat petition in apex court

டெல்லி:

மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் மருத்துவ படிப்பு, மருத்துவ மேல்படிப்பு, பல் மருத்துவ படிப்பு மற்றும் மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

இந் நிலையில், மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close