fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஒரு வாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு…! ராஜஸ்தானில் நிலவும் அரசியல் பரபரப்பு!

No motion confidence in Rajasthan assembly

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையேயான கருத்து மோதலால் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

பின்னர் சச்சின் பைலட் பதவி பறிக்கப்பட்டது. அவருடைய ஆதரவாளர்கள் 2 பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சச்சின் பைலட் உட்பட 18 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யவும் ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். இதையடுத்து அடுத்த வாரம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அசோக் கெலாட் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close