fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

மெரினாவில் சிசிடிவி மூலம் கண்காணிப்பு – கமிஷனர் விஸ்வநாதன் அறிவிப்பு!

காணும் பொங்கலன்று ஏராளமான பொது மக்கள் மெரினாவில் படையெடுப்பார்கள் என்பதால் சிசிடிவி மூலம் மெரினா முழுவதும் கண்காணிக்கப்படும் என்று சென்னை கமிஷ்னர் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

CCTV Camera. Security Surveillance System. Vector Isolated Illustration

அவர் தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவலர் சிறார் ,சிறுமியர் மன்றம் சார்பில் சென்னியில் உள்ள துரைப்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் ஓட்டம், கபடி, கயிறை இழுக்குதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விசுவநாதன் அவர்கள் பரிசுகளை வழங்கினார்,

இந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விசுவநாதன் பேசியதாவது;

” காணும் பொங்கலன்று ஏராளமான பொது மக்கள் மெரினாவில் வருவார்கள் என்பதால் சிசிடிவி கேமராக்கள் மற்றும் எல்இடி திரை அமைக்கப்பட்டு கூட்டம் கண்காணிக்கப்படும். இதனால் மெரினாவில் பொதுமக்கள் பயமின்றி காணும் பொங்கலை கொண்டாடலாம் ‘ என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close