fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

திமுக மனுவில் ஒரு கோரிக்கை கூட இல்லை…! அமைச்சர் காமராஜ் புகார்!

Minister kamaraj blames dmk

சென்னை:

திமுக அளித்த 98 ஆயிரம் மனுக்களில் ஒன்றில் கூட ஒரு போக்குவரத்து வசதி குறித்தோ, சிறு,குறு தொழில் குறித்தோ இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் புகார் கூறி உள்ளார்.

கொரோனாவால் ஊரடங்கு இன்னமும் அமலில் உள்ளது. இந் நிலையில் மக்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்ல திமுக ஒன்றிணைவோம் வா என்ற இயக்கம் தொடங்கியது.

அதில் 98 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டது. அந்த மனுக்கள் டி.ஆர்.பாலு தலைமையில் தலைமை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் திமுக பெற்ற மனுக்களை தமிழக அரசு ஆய்வு செய்து அந்தந்த ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளது.

திமுகவினர் குறிப்பிட்டது போல முக்கிய கோரிக்கைகள் எதுவும் இல்லை. பகல் இரவு பாராது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது தமிழக அரசு.

இந்த மனுக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மனுக்கள் அதிமுக அரசை குறை கூறவே அளிக்கப்பட்டுள்ளன. புகார் மனுக்களில் உள்ள தொலைபேசி எண்கள் கூட தவறு. அரசு மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவே இந்த மனுக்கள் தரப்பட்டுள்ளன என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close