பிரதமரிடம் கேட்டு விட்டு வந்து சொல்கிறேன் ; நிர்மலா சீதாராமன் நழுவல்!!!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் மரணம் அடைந்தனர். அதற்கு இன்னும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கவில்லை. இதற்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
தமிழக கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்கள். பல கட்சிகள் சேர்ந்து இதற்காக போராடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. துப்பாக்கி சூட்டை கண்டிக்கவில்லை என்றாலும் கூட, ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேட்டியளித்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரதமர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். துப்பாக்கிச்சூட்டிற்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிரதமரிடம் கேட்பேன். அவர் பதில் அளித்த பின் உங்களிடம் கூறுகிறேன், என்றார்.