தலைவர்கள் பொங்கல் வாழ்த்து!

அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கவர்னர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உட்சாகம் மற்றும் சந்தோஷத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் , என் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தை திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலங்களிட்டு , மஞ்சள்,கரும்பு,இஞ்சி , காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசி போட்டு அந்த அரிசி பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல் ‘ என்று மங்கல ஒலி எழுப்பி , இறைவனை வணங்கி , இந்த தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
இப்பொங்கல் திருநாளில் , தமிழர்களின் வாழ்வில் நலமும் ,வளமும் பெருகி , அமைதியும் ,இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தன் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி .
மேலும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும்,துணை முதலமைச்சருமான ஓ.பன்னிர்செல்வம் , கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் தமிழ் மக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.















