fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

சுதந்திர தின கொண்டாட்டம்…! டெல்லி முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலை!

Independence day security in delhi

டெல்லி:

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வரும் 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றுகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளது.

விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close