fbpx
RETamil Newsஇந்தியா

அரசு அதிகாரிகள் 9 மணிக்கு மேல் அலுவலகம் வந்தால் சம்பளம் ‘ கட் ‘-முதல்வர் உத்தரவு!

உ.பி-யில் அரசு அதிகாரிகள் 9 மணிக்கு அலுவலகம் வந்து தங்கள் பணிகளை துவங்கவேண்டும் என்ற நோக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத்உத்தரவிட்டுள்ளார். சரியான நேரத்தில் வரவில்லை என்றால் அவர்களது சம்பளம் “கட்” செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட மாஜிஸ்டிரேட் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை மக்களை சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை எப்போது நாங்கள் எப்போது வீட்டிற்க்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில் , ” நேற்று இரவு சாலை விபத்து காரணமாக அதிகாலை 4 மணிக்கு தான் வீட்டுக்கு சென்றேன் , அப்படி இருக்கும் போது காலை 9 மணிக்கு எப்படி அலுவலகம் செல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்,மேலும் அவர் இப்போது கூட ஒரு நாள் முழுவதும் வேலை பார்ப்பது போல்தான் உள்ளது” என கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close