fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ராமதாஸ் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரானது எப்படி? வேல்முருகன் கேள்வி!

வெறும் ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே சொந்தமானவராக இருந்த ராமதாஸ், தற்போது பல ஆயிரம் ஏக்கருக்கும் பல கோடிகளுக்கும்  சொந்தக்காரராக மாறியது எப்படி என்றும், வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக ராமதாஸும், அன்புமணியும் என்னுடன் விவாதிக்கத் தயாராக  இருக்கிறார்களா? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் சவால் விடுத்துள்ளார்.

ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு சென்ற வேல்முருகன், செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் தவறானது. வன்னியர் சங்க அறக்கட்டளை, மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தொடர்பாக ராமதாஸ் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2 கோடி வன்னியர்களுக்காக கல்விக் கோயில் கட்டுவதாகக் கூறி அவர் ஏராளமான நிதியை வசூலித்துள்ளார்.

வன்னியர் சங்கம், ராமதாஸ் உருவாக்கிய அமைப்பு அல்ல. வெறும் ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே சொந்தமானவராக இருந்த ராமதாஸ், தற்போது பல ஆயிரம் ஏக்கருக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். சுமார் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள வன்னியர் சங்கத்தின் சொத்துகள் தற்போது ராமதாஸிடம் உள்ளது. கருணாநிதி ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது.

இந்தத் தேர்தலில் எங்களுக்கு பணமோ, இடமோ தேவையில்லை என்றும் எங்களது 25 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளேன்.

அதேநேரம், இந்தத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற 30 தொகுதிகளிலும் திமுக கூட்டணியினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தும் அதிகாரிகள், தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன் என்று தெரியவில்லை என்று வேல்முருகன் மேலும் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close