RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் வெப்ப அழுத்த நீர் சோதனை ;பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம்!!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வெப்ப அழுத்த நீர் சோதனை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் டி.எஸ்.செளத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக வெப்ப அழுத்த நீர் சோதனை வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது.
அப்போது இயந்திரத்தின் வால்வு திறக்கப்படும்போது அதிக சத்தம் எழும். அதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.