fbpx
REதமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று  மீண்டும் திறக்கப்பட்டது.

இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் நேற்றும் இன்றும்  மது வாங்கிச் சென்றனர்.

குடிகாரர்களின்  தேவைக்காக வழக்கத்தைவிட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அனைத்தையும் தாண்டி பல மது வகைகள் முற்றிலும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியானது.

மாலை ஐந்து மணி வரை கடைகள் திறந்திருக்கும்  என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஸ்டாக் காலியாகிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

நேற்று ஒரே நாளில் 160 கோடிக்கு மது விற்பனையானதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சமூக இடைவெளி காற்றில் பரந்த சம்பவம் எங்கு நோக்கினும் காண முடிந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.அந்த வழக்கின் தீர்ப்பாக,

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கு பதிலாக  ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close