
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணபட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூரில் மாலை நேரத்தில் சூரைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.