fbpx
REஇந்தியா

மீன்களைக்கூட உண்ணாத முதலையை பார்த்ததுண்டா ? 150 வருடங்களாக வாழும் சைவ முதலை

Have you ever seen a crocodile not even eat a fish? Vegetarian crocodile that lives for 150 years

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பல நாடுகளில் சிறந்து விளங்க கூடிய ஒன்று கோவில். அதேபோன்று கேரளாவிலும் பல கோவில்கள் சிறந்து விளங்குகிறது. அதில் ஒன்றுதான் அனந்தபுரா கோவில்.இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இந்த அனந்தபுரா கோவில் அனந்த பத்மநாப  சுவாமியின் மூலஸ்தானமாக கருதபடுகிறது. இந்தப் பிரதான கோவிலை சுற்றி தலைவாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பார்க்க மிகவும் அழகாக பச்சை பசேலென்று தோன்றும் இந்த கோவில் குளத்தில் 150 ஆண்டுகளாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது. இதனை அங்குள்ள மக்கள் பபியா என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

இந்த முதலை கோவிலின் பாதுகாவலனாக திகழ்வதோடு அங்குள்ள மக்களின் மரியாதைக்குரிய பிராணியாகவும்  திகழ்கிறது.

அதோடு இங்கு வாழும் அந்த முதலை இறந்து போனாலும், இக் கோவிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதில் முக்கியமானது என்னவென்றால் பெரும்பாலும் முதலை என்றால் அசைவ உணவை தான் உண்ணும். ஆனால் இந்த ஏரியில் வாழும் முதலை அங்குள்ள மீன்களைக் கூட உண்ணாது. இது அக்கோவிலின் தனி சிறப்பாகும்.

கோவில் குளங்களில் குளிக்க வரும் பக்தர்களை இதுவரை இம்முதலை தாக்கியது இல்லை என்றும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் பிரசாதம் வழங்கும் நேரங்களில் இம்முதலை சரியாக அந்த இடத்திற்கு வந்து விடுமாம்.

ஒரு முதலை இறந்து விடுமேயானால் மறுதினமே அக்குளத்திற்கு மற்றொரு முதலை தென்படுமாம். அருகில் எந்தவித குளமோ ஆறோ இல்லாமல் இந்த குளத்திற்கு முதலை வருவது தற்போது வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

 

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close