fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி! பாஜக விலகல் எதிரொலி!! மெகபூபா முஃப்தி ராஜினாமா!!!

ஜம்மு காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்ததை தொடர்ந்து  காஷ்மீர் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28,

காஷ்மீரில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏ.க்களில் ஆதரவு வேண்டும் என்பதால், மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தன. மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வர் பதவியேற்றார்.

பாஜகவின் நிர்மல்குமார் சிங் துணை முதல்வரானார். 2016 ஆம் ஆண்டு முப்தி முகமது சையது காலமனார். புதிய முதல்வராக மெகபூபா முஃப்தி முதல்வரானார். அன்று முதல் பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வந்தன.

தற்போது அதன் இறுதிக்கட்டமாக மெகபூபா அரசுக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் பதவியை மெகபூபா முஃப்தி பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி செயல்படுத்த உள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close