fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

காடுவெட்டியில் திடீர் பதற்றம்…! குருவின் மருமகனுக்கு அரிவாள் வெட்டு, போலீஸ் குவிப்பு

Former pmk leader Kaduvetti guru son in law attacked

ஜெயங்கொண்டம்:

காடுவெட்டி குருவின் மருமகன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தால் பதற்றம்  அதிகரித்துள்ளது.

ஜெயங்கொண்டம் பகுதியில் காடுவெட்டி குரு வீட்டிற்கு வந்த அருண்குமார் என்பவர் பின்னர் தனது வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது, காமராஜர் என்பவர் அவரை வழிமறித்து, வாகனத்தை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

தகவலறிந்த காடுவெட்டி குரு மருமகன் மனோஜ், சகோதர் மதனுடன் சம்பவ இடத்திற்கு சென்று காமராஜரிடம் விவரம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்தது.

ஒரு கட்டத்தில் காமராஜர் தரப்பினர், காடுவெட்டி குரு மருமகன் மனோஜின் சகோதரரான மதனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.  தாக்குதலில் மனோஜ்க்கு காயம் ஏற்பட அவர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுள்ளார்.  அரிவாள் வெட்டு சம்பவத்தால் காடுவெட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close