முன்னாள் எம்எல்ஏ திடீர் மறைவு…! விஜயகாந்த் அதிர்ச்சி!
Former mla sundarrajan dead

மதுரை:
மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் தேமுதிகவின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த தேர்தலில்தான் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தேமுதிக பிரதான எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்திற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் தேமுதிகவில் இருந்து விலகி சிலர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களில் ஆர். சுந்தரராஜனும் ஒருவர்.
நடிகர் விஜயகாந்தின் நண்பராகவும் மதுரையில் விஜயகாந்த் நற்பணி மன்றம் அமைத்தவருமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது நண்பர்கள்,உறவினர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















