புதிய தலைமுறை மீது வழக்கு எதிரொலி : சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!!
புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினசட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்காகவா? அரசியல் காரணங்களாலா? என்ற தலைப்பில் கோவையில் புதிய தலைமுறையின் சார்பில் நடைபெற்ற வட்டமேசை விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..
நிகழ்ச்சி நடைபெற்ற அரங்க மேலாளர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகை சங்கம் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய தலைமுறை மீதான வழக்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், புதிய தலைமுறை மீதான வழக்குப்பதிவு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இதேபோல் புதிய தலைமுறை மீதான வழக்கு தேவைதானா என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, புதிய தலைமுறை மீதான வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறினார்.