RETamil Newsதமிழ்நாடு
ஸ்டலினை விமர்சிக்காதீர்கள் தொண்டர்களுக்கு வைகோ எச்சரிக்கை

திமுக செயல் தலைவர் ஆருயிர் சகோதரர் ஸ்டாலினை மதிமுக தொண்டர்கள் யாரும் விமர்சிக்க கூடாது என வைகோ கட்டளை இட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”திமுக குறித்தோ, அதன் செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் குறித்தோ, மதிமுக தோழர்கள் யாரும் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.
அப்படிச் செய்பவர்கள் மதிமுக நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் மதிமுகவினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள்.
மதிமுகவுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை”. இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளரும் ஸ்டாலின் ஆருயிர் சகோதரருமான வைகோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.