fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு மக்கள் செல்ல வேண்டாம் – ராஜ்நாத் சிங்

பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் அவர்,

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசுகள் அதிகபட்ச உதவிகளை செய்து தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கும் , ஐ.எஸ் அமைப்புக்கும் செல்லும் நிதியுதவியை தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய போர் தொடுக்கும்.மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் நாம் வெற்றிபெறுவோம்.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிஆர்பிஎப் வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்.

Related Articles

Back to top button
Close
Close