10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்..! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
DMK leader stalin opposes SSLC exam

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது. ஜூன் 1 முதல் 12 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும் என்ற தமிழக அரசு அதற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது.
இந் நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளிவைக்க திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு மாணவர்கள் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கும். போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி மாணவர்கள் தேர்வெழுத எப்படி வருவார்கள்?
கொரோனா கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பிய பின்னரே பொதுத் தேர்வை நடத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை மனரீதியாக தயார் செய்தபின் தேதியை அறிவிப்பதே சரியானது என்று தெரிவித்துள்ளார்.















