fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் – பல்வேறு தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , டில்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சிட் உடல்நல குறைவால் காலமானார்.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற இடத்தை சேர்ந்த இவர் 1938-ஆம் ஆண்டு மார்ச் 31-ல் பிறந்தவர் . சுமார் 81 வயதான இவர் 3 முறை அதாவது 15 ஆண்டுகள் டெல்லியில் முதலமைச்சராக பதவி வகித்தவர்.

முதலில் டெல்லி மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார்.பின்னர் 1998 முதல் 2013-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதல்வராக தலைமை வகித்து வந்தார்.பின்னர் 2014-ஆம் ஆண்டில் கேரளாவின் ஆளுநராகவும் பதவிவகித்து வந்தார்.ஆண்மையும் நடந்த மக்களவை தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தலைவர்களின் இரங்கல் செய்தி ;

ஷீலா தீட்சித் அவர்களின் மறைவு டெல்லிக்கு ஒரு பெரிய பேரிழப்பாகும் ; டெல்லியில் அவரின் பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும் என டெல்லிமாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக 3 முறை டெல்லியில் முதல்வராக தனது தன்னலமற்ற பணியை செய்தவர்.”காங்கிரஸ் கட்சி தனது அன்பான மகளை இழந்துவிட்டது ‘என ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் தனது பங்காற்றியவர் ஷீலா தீட்சித் என கூறி பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் மற்ற கட்சியின் பல தலைவர்களும் ஷீலா தீட்சித் மறைவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close