fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

அதிகரிக்கும் வெட்டுக்கிளி படைகள்…! விமானிகளுக்கு அறிவுரை!

DCGA advises to Pilots

டெல்லி:

வெட்டுக்கிளி பரவல் அதிகரித்துள்ளதால் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்படுமாறு விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படைகள் ஊடுருவி இருக்கின்றன. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமான அளவில் பரவி உள்ளது.

தமிழகத்தில் கூட கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் கூட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தால் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. விமானத்தை டேக் ஆப் செய்யும் போது வெட்டுக்கிளிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டால் மற்ற விமானிகளுக்கும் கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close