ஜூலை 6 முதல் ஊரடங்கு எங்கெல்லாம் தளர்வு – தமிழக அரசு!

சென்னை:
தமிழகத்தில் உத்தரவுவிடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஞாயிறு நள்ளிரவுடன் நிறைவுபெறஉள்ளதால், வரும் 6ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் வேலைக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்,பல மாவட்டங்களுக்கு அப்பால் செல்லும் தொழிலாளர்கள் முன்பாகவே வாங்கிய இ-பாஸை உபயோகிக்கலாம் என்று அறிவித்துள்ளது
தமிழக அரசு இன்று அறிவித்திருக்கும் அறிக்கையில், சென்னை காவல் துறை எல்லையிலுள்ள பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எல்லைக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் 19.6.2020-லிருந்து முழு ஊரடங்கு உத்தரவினை அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு உத்தரவு 5.7.2020தேதி வரை அமலில் இருக்கிறது
மேலும் உள்ள பகுதிகளில் 6.7.2020தேதி முதல் தகவல் தொழில்நுட்பம் போன்ற சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இவை எல்லாம் 50% சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி மேலும் தமிழகத்தின் பிற இடங்களில் உள்ள (நோய் கட்டுப்பாட்டு இடங்களை தவிர) தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 100% சதவீதப்பணியாளர்களுடன் செயல்பட அனுமதித்தும் 30.6.2020 ஆம் நாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை (நிலை) எண்.324 அறிவித்துள்ளது.
மேலும்,தொழிலாளர்கள் மாவட்டங்கள் இடையே வேலைக்குச் சென்றுவர இ-பாஸ் அவசியம் என்றும் மாவட்டத்திற்குள் வேலைக்குச் சென்றுவர இ-பாஸ் அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், 19.6.2020-ஆம் தேதிக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே வழங்கியுள்ள மாவட்டங்கள் இடையே சென்று திரும்பி வருவதற்கான இ-பாஸ் மற்றும் மற்ற பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் பல நிறுவனங்கள் உபயோகித்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. எனவே, 6.7.2020-ஆம் தேதிக்கு பிறகு மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு புதிய இ-பாஸ்/ இதர-பாஸ்கள் பெற முக்கியமில்லை இதுவரை இ-பாஸ் மற்றும் இதரபாஸ்கள் பெறாதவர்கள் உரிய முறைகளின் படி விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
















