fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கொரோனா தொற்று:மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்!

சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு என்கிற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்  இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து 103 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228-ஆக அதிகரித்துள்ளது.

தென்காசி, திருவள்ளூரில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் முழுவிவரம் :

சென்னை – 228   கோவை – 127   திருப்பூர் – 80   ஈரோடு – 70  திண்டுக்கல் – 66  திருநெல்வேலி – 58 செங்கல்பட்டு – 50     நாமக்கல் – 50 திருச்சி – 46 திருவள்ளூர் – 46 மதுரை – 44 தேனி – 43 கரூர் – 42 நாகப்பட்டினம் – 40 ராணிப்பேட்டை – 39 தஞ்சாவூர் – 35 தூத்துக்குடி – 26 விழுப்புரம் – 26 வேலூர் – 22 திருப்பத்தூர் – 17

சேலம் – 24 திருவாரூர் – 21 கடலூர் – 20 விருதுநகர் – 17
கன்னியாகுமரி – 16 தென்காசி – 14 திருவண்ணாமலை – 12
சிவகங்கை – 11 ராமநாதபுரம் – 10 நீலகிரி – 09 காஞ்சிபுரம் – 08 கள்ளக்குறிச்சி – 03 அரியலூர் – 02
பெரம்பலூர் – 01

புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close