fbpx
RETamil Newsஉலகம்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது

Corona's impact on European countries is diminishing

கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் தற்போது பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

குறிப்பாக அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த இத்தாலி,ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் மிகக் குறைந்த நபரே கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் 135 பேரும், ஸ்பெயினில் 164 பேரும் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இது கடந்த மூன்று வாரங்களை ஒப்பிடுகையில் மிகக் குறைந்த பாதிப்பாகும்.

அதேபோல் பிரான்ஸ் நாட்டில் மே 11 முதல் பொது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து பள்ளிகளும் திறக்கப்பட இருக்கின்றன.

தென் கொரியா நாட்டில் மே 6 முதல் பொது ஊரடங்கு தளர்த்தப் பட உள்ளது. இதை அடுத்து இங்கு தனிநபர் இடைவெளிக்கான கட்டுப்பாடுகளும் அடுத்து அடுத்து தளர்த்தப்பட இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப் பட வேண்டிய தேதியையும் இந்நாடு விரைவில் தெரிவிக்க உள்ளது.

ஹாங்காங்கில் கடந்த இரு வாரங்களாக உள்ளூர் தொற்று எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அங்கு நூலகம், பூங்கா போன்றவை திறக்கப்பட உள்ளன.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் பிரிட்டன் உள்ளது. இங்கு இன்று மட்டும் 315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அங்கு கொரோனா தொற்றால் மருத்துவமனையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனையடுத்து ,கடந்த மூன்று வாரங்களை விட தற்போது அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close