fbpx
RETamil Newsதமிழ்நாடு

சமூகபரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு! கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்க தடை

Control measures by our tamilnadu government

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சமூகபரவலை தடுப்பதற்காக கீழ்கானும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் , பழங்கள் , பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடைச்செய்யப் பட்டுள்ளதாகவும், கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை ( Retail Trading ) முழுவதுமாக தடைச்செய்யபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள் , பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை மக்கள் உபயோக படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவுதாணிய அங்காடிக்கும் பொருந்தும் என்றும் தற்பொழுது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் லாரிகள் மற்றும் வீட்டு வினியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காய்கறிகள் வினியோகமானது தொடர்ந்து நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close