fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி !

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:

1. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
2. இந்தியாவில் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்தார்.
3. மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
4. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
5. 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்
6. நியாய் திட்டத்தில் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும்.
7. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 6% கல்விக்காக ஒதுக்கப்படும்.
8. மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
9. 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.

பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்தல் அறிக்கை உண்மையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன் என்று ராகுல்காந்தி கூறினார்.

மேலும் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “தென் இந்திய மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்போதுமே காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. அதற்க்கு ஒரு சான்று தான் நான் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவது” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close