fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்உலகம்

ராமர் பற்றிய நேபாள பிரதமரின் பேச்சு:நேபால் வெளியுறவு அமைச்சகம் உறுதி!

Ministry explain about Nepal PM oli speech

காத்மாண்டு:

ராமர்  நேபாளத்தில் பிறந்தவர் என்ற பிரதமரின் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. அவரது பிறப்பிடம் காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் தெரிவித்தார்.

கடவுள் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல என்பதும் அவரது வாதமாகும். நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந் நிலையில், நேபாள பிரதமர் கருத்து குறித்து விளக்கம் தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல.

அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கேபி ஷர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அரசியல் நோக்கத்தோடு பேசவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close