கிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15…! 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..! ஷாக் தகவல்!
Chennai mgr university research studies

சென்னை:
ஜூலை 15ம் தேதி 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் 7ம் தேதி, கொரோனா வைரசின் முதல் பாதிப்பு தொடங்கியது.
நேற்று வரையிலான நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694 ஆகும். சென்னையில் மட்டும் 19 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையை அடைந்திருக்கிறது. மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 69.09 சதவீதமாக உள்ளது.

இந் நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், நோய் பரவியல் துறை தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட நிபுணர்கள் குழு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுதான் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முக்கிய அம்சமாகும். இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது உள்ள நிலை நீடித்தால் ஜூலை மாதம் 15ம் தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள். சென்னையில் மட்டும் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை 1,949 ஆக இருக்கும் என்றும், சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 1,654 ஆக இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.















