fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

கொரோனா அச்சுறுத்தலால் சிவப்பு சாயம் பூசப்பட்ட சென்னை

Chennai Becomes Red Zone due to Corona Virus

பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் மட்டும் தான் கொரோனாவின் தாக்கம் மிகுதியாக காணப்படுகிறது. தினமும் , நாளுக்குநாள் 100க்கு மேற்பட்ட நபர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

குறிப்பாக மயிலாப்பூரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்பட்ட கொரோனா வைரஸ் அங்குள்ள அனைவருக்கும் பரவி தற்போது மயிலாப்பூரே பீதிக்கு உள்ளாகியுள்ளது.

சென்னையில் அம்பத்தூர் மண்டலத்தை அடுத்த பாரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை கோயம்பேடு சந்தையில் கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். இவரிடம் கொத்தமல்லி வாங்கிய பலரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர் வசிக்கும் பாரி குப்பம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட முதியோர் வரை மொத்தம் 13 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து, அங்குள்ள மக்களிடையே நாளுக்குநாள் கொரோனா பரவி வருவதால் சென்னை மாநகர் முழுவதும் சிவப்பு சாயம் பூசப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close