fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சென்னை – ஆவடி ரெயில்கள் ரத்து;பிப் 22 ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை இயங்காது – ரயில்வேதுறை

இன்று முதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்தில் தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது;

சென்னை – ராயபுரம் வழித்தடத்தில் இன்று முதல் (21.2.19) மார்ச் 5-ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிப் -24 மற்றும் மார்ச் 3 ம் தேதி இரவு இரவு 11.15 மணிக்கு சென்னை முதல் ஆவடி வரை செல்லும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் மாரு மார்கத்தில் காலை 4.30 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரையை வந்தடையும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இரவு 10.30 மணிக்கு வேளச்சேரியிலிருந்து புறப்பட்டு ஆவடி சென்றடையும் மின்சார ரயில்
பிப் 22 ஆம் தேதி முதல் மார்ச் 4 -ஆம் தேதி வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். இதே போல் மறு மார்க்கத்தில் காலை 4.10 மணிக்கு அவடியிலிருந்து புறப்படும் மின்சார ரயில்கள் ஆவடி- கடற்கரை வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டு காலை 5.10 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்படும். கடற்கரையிலிருந்து 1.20 மணிக்கு புறப்படும் அரக்கோண மின்சார ரயில் 21-ம் தேதி முதல் மார்ச் 5 தேதி வரை மூர்மார்க்கெட்டிலிருந்து 1.25 மணிக்கு புறப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button
Close
Close